இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் புதிய பதிவு



முதல் தடவையாக தெருவெளி நாடக ஆற்றுகையின் எழுத்துருப் பிரதிகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளது

2012 ஆம் ஆண்டு ஈழத்து நாடக உலகில் கால் பதித்து தெரு வெளி நாடகங்களினை இலங்கையின் பல பிரதேசங்களில் ஆற்றுகை செய்து வந்த புத்தாக்க அரங்க இயக்கம் தனது தெருவெளி ஆற்றுகைகளின் எழுத்துருப் பிரதியினை பண்படு என்ற பெயரில் நூல் உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

எஸ்ரி .குமரன் எஸ்.ரி.அருள் குமரனின் எழுத்தருவாக்கம் நெறியாள்கையில் புத்தாக்க அரங்க இயக்கக் கலைஞர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட தெருவெளி ஆற்றகைகள் காலத்தின் தேவை கருத்தியும் ஆற்றுகையின் வெற்றி கருதியும் பலரது வேண்டுகோளுக்கினங்க ஆவணமாக்கும் முயற்ச்சியில் நூல் உருப்பெற்றுள்ளது.இவ் பண்படு என்னும் நூலினுள் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் (வாசிப்பு விழிப்புணர்வு பண்படு (கலாசார விழிப்புணர்வு) கருகும் மொட்டுக்கள் (பெண்கள் வண்முறை போதைக்கு எதிரான பிரச்சனை ) வாழ்வதற்க்கு (தேர்தல் வாக்காளர் விழிப்பூட்டல்) நாளைய தலைவர்கள் (சிறுவர் உரிமை) ஆகிய 5 தெருவெளி ஆற்றுகைகளின் பிரதிகள் இடம்பெற்றுள்ளன.

நூல் - பண்படு ( தெருவெளி நாடகப் பிரதிகள்)

ஆசிரியர்கள் எஸ்.ரி.குமரன் 
எஸ்.ரி.அருள்குமரன்

வெளியீடு - புத்தாக்க அரங்க இயக்கம்

முதற்ப்பதிப்பு - கார்த்திகை - 2016

நூலின் விலை - 250 ரூபா

ஐஎஸ்பிஎன் - 978 - 955 - 43186 - 0- 1

பண்படு என்னும் இத் தெருவெளி நாடகப்பிரதி நூலினை பெற்றுக்கொள்ள விரும்புகின்ற நாடக ஆர்வலர்கள் நூல் ஆர்வலர்கள் முக நூலின் இன் பொக்ஸ் சிலோ அல்லது 0779596710 0779773538 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு நூலினை பெற்றுக்கொள்ள முடியும்

நன்றி 
புத்தாக்கக அரங்க இயக்கம் 
கோவில் வீதி 
மல்லாகம்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.