விருந்தோம்பலால் சிறப்புற்று விளங்கும் - மட்டக்களப்பு

மட்டக்களப்பு என்றால் பாயோட ஒட்டவச்சிருவாங்க என்பதன் உண்மையான கருத்து.

பாயோட ஒட்டவச்சுருவாங்க என்பது உண்மைதான் ஆனால் அதுக்குப்பின்னால இருக்கிற காரணம் வேற. சாதாரணமா செய்வினை, ஏவல், சூனியம் போன்ற தனிப்பட்ட பயங்கள் எதுவுமில்ல. வீட்டில் பெண்பிள்ளை இருந்தால் மாப்பிள்ளை ஆக்க செய்வினை வைப்பாங்க என்றில்லை. 
இவங்களோட விருந்தோம்பல்ல, அந்நியோன்னியமான, நட்பான பழக்கத்தில இந்த மக்களோடு பழகத்தொடங்கினா அது கடைசிகாலம் வரைக்கும் மறக்காது. யாரெண்டே தெரியாட்டிலும் மகன், மகள் எண்டு கதைக்கிறத நான் வேற எங்கயுமே கண்டதில்ல.
உதவி செய்ய தயங்குறதா நான் யாரையும் கண்டதில்லை.(விதிவிலக்குகள் உண்டு).
லாகன் மீன் போட்டு சுண்டிய திராய்ச்சுண்டல்,இராலுடன் மரவள்ளிக்கிழங்கு சொதி,வாவியில் பிடித்த யப்பான் மீன் குழம்பு.
நினைத்தாலே பசி எடுக்கும்.
இவற்றை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பன் புல்லுப் பாயில் படுத்துறங்கினால் எழும்பவே மனம் வராது அதைத்தான் பாயோடு ஒட்ட வச்சுருவாங்கள் என்றும் கூறுகின்றனர்.
மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை
சிறப்பான விருந்தோம்பல் இன்றும் மாறாமல் இருக்கின்றது
சாதாரணமா விசிட் போனாக்கூட சாப்பாடு போட்டு அனுப்புறத வழக்கமா வச்சிருக்கிற சனம்யா இது.
உக்காந்து சாப்பிட்டா அவங்கட உபசரிப்பிலயும் அந்நியோன்னியத்திலும் நம்ம அவங்களை லேசில மறக்கமாட்டோம் என்றதுதான் ஹைலைட்.
உண்மையாக ‘பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்ற வசனம் இங்க கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும். ஆனா அதை பலர் வேற விதமா சொல்றது அதை சொல்பவர்களுக்கு இருக்கும் வருத்தம்.
” மட்டக்களப்பு என்று சொல்லடா! மண்ணில் பெருமை கொள்ளடா!”

Theme images by mammuth. Powered by Blogger.