விரைவாக பகிருங்கள் : பல்கலைக்கழக அனுமதி குறித்த செய்தி
விரைவாகப் பகிரவும். இம்முறை University இற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் உங்களுடைய பல்கலைக்கழக (55 பாடநெறிகளின்) பதிவு செய்யும் இறுதித் திகதி 23.06.2017 ஏனையவற்றிற்கு ( 51 பாட நெறிகளிற்கு ) மாத்திரம் 27.06.2017 ஆகும். நீங்கள் பல்கலைக்கழகத்தின் பாட நெறிக்கு உங்களை பதிவு செய்ய முதலில் இலங்கை வங்கியில் BOC ரூபா 50/= செலுத்த வேண்டும். அதைச் செலுத்தும் பற்றுச் சீட்டில் உங்கள் ref. No ஐ குறிப்பிட வேண்டும்.
Ref.no தெரியாதவர்கள் University அனுமதிக்கான கடிதம் இன்னும் கிடைக்காதவர்கள் உடனே UGC இன் தொலைபேசி எண்ணை 0112677730 தொடர்பு கொண்டு A/L index number ஐ கூறி ref. No ஐ பெற்றுக்கொண்டு முதலில் வங்கியில் ரூபா 50/= ஐ செலுத்தவும். அதன் பிறகு www.ugc.ac.lk இனூடாக online மூலம் பதிவு செய்யலாம்.வங்கியில் பணம் செலுத்திய பின் உங்களுக்கு பற்றுச் சீட்டின் 2 காபன் பிரதி வழங்கப்படும். அதில் ஒன்றை உங்களிடம் வைத்துக் கொண்டு மற்றைய பிரதியையும் online register மூலம் கிடைக்கும் payment slip இன் print out ஐயும் ஒன்றாக இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
