பூமியைத் தாக்கவுள்ள சூரியப்புயல் - எச்சரிக்கை
சூரியனின் மேற்பரப்பில் 6,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை காணப்படுவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சூரியனிலிருந்து உருவாகும் புயல் பூமியைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டு வந்தது.
இதேபோன்றே தற்போதும் இடம்பெற்ற ஆய்வு ஒன்றின் அடிப்படையில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சூரியனின் மேற்பரப்பில் குமிழிகள் போன்று கொந்தளிப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இதனால் சூரியப்புயல் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சூரியப்புயல் உருவாகின் அது பூமியையும் தாக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அனர்த்தம் எப்போது நிகழும் என சரியாக குறிப்பிட முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
