சீனாவின் மிரட்டிடலால் இந்தியா பீதியில்
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மூச்சந்திப்பில் டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே ராணு வத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது.
இதனையடுத்து சீனா தனது அதிநவீன போர்க் கப்பல்களை எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது என இந்திய சட்லைர் மூலம் இந்தியா கண்டறிந்துள்ளது. இதனால் இந்தியா கடும் பீதியில் உள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.
தமது படைபலம் மூலம் இந்தியா சீனாவை சமாளிக்க முடியாத நிலையே அதற்கு காரணமாக இருக்கக்கூடும் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகளிலிருந்து தெரியவந்துள்ளது.

