மதுபோதையில் முச்சக்கர வண்டி ஓட்டிச் சென்ற பெண் கைது - கலகெதர
மதுபோதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண்ணொருவரை கலகெதர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண் கலகெதர நகரில் வாடகை முச்சக்கர வண்டியின் சாரதியாக தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மதுபோதையில் இருந்தது எல்கோலைய்சர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதன்போது தான் விருந்து ஒன்றுக்கு சென்று வந்ததாக பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளர்.
கைது செய்யப்பட்ட பெண் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
