35 - 45 வயதிற்கு உட்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க இணக்கம் : வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் தேசிய கொள்கை மற்றும் அபிவிருத்தி அதிகார அமைச்சினால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளையும் உள்வாங்குமாறு மகஜர் கையளிக்கப்பட்டது.
இம் மகஜர்கள் கௌரவ முதலமைச்சர், கௌரவ ஆளுனர், அரச அதிபர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
கோரப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்புமாறு முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளிற்கு கூறப்பட்டது.
குறித்த அமைப்புக்களுக்கு எமது பிரச்சனையை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இன்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் சிலர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு இராஜாங்க அமைச்சின் செயலாளர் பிரதமரின் செயலாளர் மற்றும்அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு செயலாளரை சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையாயினும், 35 - 45 வயதிற்கு உட்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் வரை தொடர்ந்தும் வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் எம்முடன் இணைந்து செயற்படுங்கள்
வெற்றி நமதே!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்


No comments