வாழைச்சேனையில் காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை, முறாவோடை பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இன்று காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது.

No comments