எதிர்க்கட்சி வரிசை கதிரை : டெனீஸ்வரன், குருகுலராஜா, ஐங்கரநேசன், சத்தியலிங்கம்

வடக்கு மாகாண புதிய அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்ற நிலையில் புதிய வரிசைப்படி கதிரை ஒழுங்குகள் மாற்றப்பட்டுள்ளன. கைதடியிலலுள்ள மாகாணசபை கட்டடத்தில்  (24) 103 ஆவது அமர்வு நடைபெற்றது. அதன்போது புதிய அமைச்சர்கள் முதலமைச்சருக்கு அருகாக கதிரையில் அமர்ந்திருக்க முன்னைய அமைச்சர்களது கதிரையிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
பதவியினை விட்டு விலக மாட்டேனென முரண்டுபிடித்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இன்று எதிர்வரிசைக்கு சென்றிருந்தார். முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கடைசி வரிசைக்கு சென்றிருந்தார். அதேபோல முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோரும் எதிர்க்கட்சி வரிசையின் முதலாவது நிரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.