மலிங்காவிற்கு சவால்விடும் வியஜராஜ் : ஈழத் தமிழன்டா : திறமையை உலகறியட்டும் பகிருங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதற்கு தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள பகுதீக வளங்கள் கிடைக்கவில்லை என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி - பளையை சேர்ந்த வேக பந்துவீச்சாளர் செபஸ்டியாம்பிள்ளை விஜயராஜை வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று அழைத்து பேசியதுடன் தான் உதவிகளையும் வழங்குவதுடன் இளைஞர் விரும்பினால் பொலிஸ் அணியிலும் இணைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.
தான் சிறு வயது முதல் லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் நிமிர்த்தம் திறமையை உலகறிய செய்ய முடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

No comments