புலம்பெயர் உறவுகள் உதவியோடு தூர்வாரப்படும் காரைநகர் கேணிகள்


கனடா தொகுப்பாளரின் அண்மைய ஊர் பயணத்தின் போது காரைநகர் வலந்தலை பகுதியில் அமைந்துள்ள கோயில் கேணிகளை தூர்வாரி ஆழப்படுத்த எடுத்துக்கொண்ட துரித முயற்சியினால் தொடர்ந்து 13.09.2017 அன்று ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள தாமரை குளம் தூர்வாரப்பட்டது. 
கனடாவில் இருந்து  திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன், 
பிரான்ஸ்சில் இருந்து நேரு மாஸ்ரர் 
ஆகியோரின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற இத்திட்டமானது காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக செயற்படுத்தப்படுகின்றது.
இச்செயற்பாட்டினை திரு.வே.சபாலிங்கம் அவர்கள் நேரடியான கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றது.இதுவரை நீலிப்பந்தனை கேணி, சடையாளியில் 2 கேணிகள், ஆலடி கேணி, தாமரைகுளம் என்பன இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு ஆலங்கன்று வைரவர் ஆலய கேணி தொடர்ந்து தூர்வாரப்பட்டு ஆழமாக்கப்படவுள்ளது.









No comments

Theme images by mammuth. Powered by Blogger.