மெக்ஸிகோவில் பயங்கர பூகம்பம் - 226 பேர் மரணம்
மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இதுவரை குறைந்தபட்சம் 226 பேர் உயிரிழந்துள்ளதுடன், மெக்ஸிகோ தலைநகரில் பாரிய அளவு கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளது.
அத்துடன் அங்குள்ள பாடசாலை ஒன்று உடைந்து விழுந்த காரணத்தினால் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி என்ரிக் பேனா தெரிவித்துள்ளார்.
இந்த பூகம்பம் 7.1 மெக்னடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தின் காரணமாக மெக்ஸிகோ தலை நகரில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற எரிவாயு குழாய்கள் காரணமாக தெருக்களில் புகை பிடித்தலை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பலரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் தொகை அதிகமாக காணப்படும் மெக்சிக்கோ நகரம் மற்றும் Cuernavaca-விற்கு அருகாமையில் பல கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன.
தலைநகரின் மத்திய அயல் புறங்கள் ஒன்றை புகை மண்டலம் மூடியுள்ளது.
தூசி மேகத்திற்குள் கட்டிடம் ஒன்று மூழ்கியுள்ளதாகவும் அதற்குள் மக்கள் அகப்பட்டுள்ளனரா என்பது தெரியாது.
இந்த நடுக்கம் மெக்சிக்கோ மக்களை பீதியடைய செய்துள்ளதுடன் காரியாலய பணியாளர்கள் வீதிகளில் ஓடத்தொடங்கினர்.




No comments