பளையில் வெடிகுண்டு : 546 குடும்பங்கள் வெளியேற்றம்

பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 546 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.