பெண்ணுக்கு பொலிஸ் ஜீப்பில் பிறந்தது குழந்தை - தாயும் சேயும் நலம்
பிரசவ வலியினால் துடித்த பெண்ணுக்கு பொலிஸ் ஜீப்பில் பிறந்தது குழந்தை
-தொல்புரத்ததை சேர்ந்த தாயும் சேயும் நலம்-
பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்த கர்பினி பெண்னை வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஜுப் வண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது, தாய் இடைநடுவில் பெண் குழந்தை பிரசவித்த சம்பவம் நோற்று (03) காலை இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் பகுதியினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஜெயரூபி என்ற பெண்ணே பொலிஸ் வாகனத்தில் பெண்குழந்தையினை பிரசவித்தவர் ஆவார். மேற்படி பெண் நோற்று (03) காலை பிரசவ வலி காரணமாக முச்சக்கரவண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.
இதன் போது முச்சக்கரவண்டி இடைநடுவில் பழுதடைந்துள்ளது. பிரசவ வலிகாரணமாக துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அவ் வழியால் வந்த வட்டுக்கோட்டை பொலிஸார் தமது ஜீப் வண்டியில் ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்னர்.
இதன் ஜீப் வண்டி ஜந்து சந்தி பகுதியினை அன்மித்துக்கொண்டிருந்த போது குறித்த கர்பிணி பெண் ஓடிக்கொண்டிருந்த ஜீப் வண்டியில் அழகான பெண்குழந்தையினை பிரசவத்துள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸ் வாகன சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தார்.
பொலிஸாரின் செயற்பாட்டினை கண்ட அணைவரும் பாரட்டுக்களை தெரிவித்ததுடன், குறித்த பெண்ணின் குடும்பம் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தமது நன்றயினை தெரிவித்துள்ளனர்.

No comments