இயற்கை அமைப்பின் இலவச சிறுநீரக செயற்பாட்டு இரத்த பரிசோதனை மருத்துவ முகாம் - 31.03.2018
இயற்கை அமைப்பினால் 31.03.2018 அன்று ஒழுங்குசெய்யப்பட்ட இலவச சிறுநீரக செயற்பாட்டு இரத்த பரிசோதனை மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள இயற்கை அமைப்பின் அலுவலகத்தில் இந்த பரிசோதனை முகாம் இடம்பெற்றிருந்தது.
இந்த மருத்துவ முகாமிற்கு 94 பயனாளர்கள் வருகைதந்து தமது இரத்த பரிசோதனையை நடாத்தி சென்றிருந்தனர்.
மானிப்பாயில் அமைந்துள்ள லக்ஷ்மி மருத்துவ ஆய்வுகூடத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இவ் மருத்துவ முகாமில் பயன்பெற்ற பயனாளர்களின் 3 நபர்களுக்கு சிறுநீரக செயற்பாட்டு கோளாறு காணப்படுவது இனம்காணப்பட்டு உடனடியாக மருத்துவ ஆய்வுகூட உரிமையாளர் சுரேஷ்குமார் அவர்களால் வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டு அரச வைத்தியசாலையை நாடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மிகுதி நபர்களுடைய இரத்த பரிசோதனை அறிக்கை 21.04.2018 அன்று இயற்கை அலுவலகத்தில் கையளிக்கப்படும் என்பதனையும் லக்ஷ்மி மருத்துவ ஆய்வுகூட உரிமையாளர் சுரேஷ்குமார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
No comments