சிறிய மழைக்கு வெள்ளக் காடான மருதனார்மட சந்தை - உறங்குகிறதா வலிதெற்கு பிரதேசசபை
வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட மருதனார்மட சந்தை ஓர் நாள் மழையில் வெள்ளத்தில் நிரம்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பல அசௌகரியங்களையும் அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிதைந்த மரக்கறிகள் மக்கள் உட்க்கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் குறித்த சிந்தனை இல்லையா ?
வீடுகளில் ஏற்படும் சிறு வெள்ளத்திற்கு தண்டப்பணம் விதிக்கும் பிரதேச சபைக்கு உட்பட்ட சுகாதார பிரிவின் செயற்பாடு மருதனார்மட வெள்ளத்தில் கண்டும் காணாமல் போனது ஏன்?
வருடத்திற்கு பலகோடி வரிகளை பெறும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை குறித்த மருதனார்மட சந்தை கட்டடத்தொகுதிகளுக்காக என்ன அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது? எந்தவிதமான வளர்ச்சியும் , அபிவிருத்தி செயற்பாடுகளும் இல்லாமல் குறித்த சந்தை கட்டிடத்தொகுதி பல காலமாக இயங்கிவருகின்றது. இதற்கு வலிகாமம் தெற்கு பிரதேசசபை என்ன தீர்வை மேற்கொள்ள போகின்றது. வாழ்வாதாரம் தேட வரும் மருதனார்மட சந்தை வியாபாரிகளின் அசௌகரியங்களை தீர்க்காமல் வரிப்பணத்தை மட்டும் சுரண்டும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தற்போது மக்களால் புறக்கணிக்கப்படுவதையே காணக்கூடியதாக உள்ளது.
No comments