கோட்பாட்டுத் தொடர்புகள்
தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வில் சேவைநாடியினுடைய பிரச்சினையை முழுமையாக பகுப்பாய்வு செய்து அறிந்துகொள்வதற்கும் சேவைநாடியை முழுமையாக பிரச்சினையிலிருந்து வெளிகொணர்வதற்கும் கோட்பாடுகள், நுட்பங்கள் மற்றும் திறன்களின் பயன்பாடு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் ஒவ்வொரு கோட்பாடுகளும் பிரச்சனைகளை அறிந்துகொள்ளத் தேவையான நுட்பங்களைத் தெளிவுபடுத்துகின்றன.
சேவைநாடியிடமிருந்து பிரச்சனைகளை அடையாளங்காண பயன்படுத்தப்பட்ட கோட்பாடுகளும் நுட்பங்களும்
ஆள்மையக் கோட்பாடு:
சுய அடைவிலும் சுய எண்ணக்கருவிலும் பிரச்சினையை உடைய சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு ஆள்மையக்கோட்பாடு எனப்படும்.
தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வின் போது சேவைநாடியை மதிப்பளித்து வரவேற்றல் உறவைக்கட்டியெழுப்புவதற்கு முக்கியமாகும். இது இந்தக் கோட்பாட்டில் சுழடிநசவ முயசமரக குறிப்பிட்டதன் படி சுநளிநஉவ எனும் நுட்பம் ஊடாக தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், சேவைநாடிக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு சுழடிநசவ முயசமரக கூறிய நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுயவெளிப்படுத்தல் ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் ஏற்றுக்கொள்ளல், ஒத்துணர்வு ஆகிய நுட்பங்கள் சேவைநாடிக்கும் உளவளத்துணையாளருக்குமிடையில் தொழில்வாண்மையான உறவைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்டது.
உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு
தொழில்வாண்மையான உளவளத்துணைச் செயலமர்வின் போது சேவைநாடியை சுதந்திர உரையாடலுக்கு அனுமதிப்பதனூடாக அவருடைய பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறியமுடியும். அவர் சுதந்திரமாக உரையாடும் போது வாய்தவறிக்கூறிய விடயங்களை பிரதான தரவுகளாகக் கொண்டு உளவளத்துணைச் செயலமர்வை மேற்கொள்ள முடிந்தது. மேலும், சேவைநாடியினுடைய கடந்தகால பிரச்சனை தொடர்பான வரலாற்றினை அறிந்து கொள்ள டகைந டiநெ எனும் நுட்பம் சாதகமாக அமைந்தது. இதனூடாக குறித்த சேவைநாடி தனது பிரச்சனை தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ளவும் உளவளத்துணையாளர் என்னும் ரீதியில் நாம் கவனிக்கப்படவேண்டிய விடயங்களை அவதானித்து சேவைநாடியை வசதிப்படுத்த முடியும்.
சேவைநாடியின் பிரச்சனைகளிலிருந்து சேவைநாடியை வெளிக்கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட கோட்பாடுகளும் நுட்பங்களும்:
நடத்தைமாற்றக்கோட்பாடு:
அசாதாரண நடத்தைகளால் பாதிக்கப்பட்ட சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு நடத்தை மாற்றக் கோட்பாடு எனப்படும்;.
சுநடயஒயவழைnஇ அழனநடiபெஇ சுழடநிடயலஇ ர்ழஅந றழசமஇ Pழளவைiஎந வாiமெiபெஇ ளுழஉயைட ளமடைட வசயiniபெஇ நுஒpழளந யனெ சநளிழளெந pசநஎநவெழைn ஆகிய நுட்பங்கள் பயன்படத்தப்பட்டன.
இருப்பியல்வாத கோட்பாடு:
இருப்பியல்வாதக் கோட்பாடு என்பது தன்னுடைய இருப்பில் பிரச்சனை உள்ளது என்ற மனநிலையிலுள்ள சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு இருப்பியல்வாத கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டில் டழபழ வாநசயிலஇ னரவல யனெ சநளிழளெiடிடைவைலஇ புழயட ளநவவiபெஇ ளுpசைவைரயட hழடநஇ hநயச யனெ ழெற ஆகிய நுட்பங்கள் குறித்த சேவைநாடி அந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளிவர பயன்படுத்தப்பட்டன.
அறிகை மற்றும் நடத்தைமாற்றக் கோட்பாடு:
அறிகைசார் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட சேவைநாடிகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு அறிகைசார் நடத்தைமாற்றக் கோட்பாடு எனப்படும். அந்தவகையில் அறிகைசார் விருத்தியினை சேவைநாடிகளுக்கு ஏற்படுத்தும்போது அவர்கள் அப்பிரச்சனைகளிலிருந்த விடுபட முடிகின்றது. இவற்றில் உளக்கல்வி வழங்கல் எனும் நுட்பம் இன்றியமையாததாகும்.
பிரச்சினையை விளங்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் முறைகள்
டீயுளுஐஊ ஐனு மதிப்பீட்டுக்கருவி என்பது ஒரு சேவைநாடியை 7 தளங்களில் அவருடைய நிலையை ஆராய்வதற்கு பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுக் கருவியாகும். யுசயெடன டுயுணுயுசுருளு என்கின்ற உளவியலாளரினால் 1970களில் அறிமுகம் செய்யப்பட்டது. இது முழுமையான மதிப்பீட்டு கருவியாகும். நடத்தை, பாதிப்பு, உணர்வு, படங்கள், அறிவாற்றல், தனிநபர்கள் மற்றும் மருந்துகள்ஃஉயிரியல் இந்தக் களங்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதை உளவளத்துணையாளர் மதிப்பீடு செய்வதுடன் எவ்வாறான இடையீட்டு நடைமுறை நோக்கங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை இந்த முழுமையான அணுகுமுறையிலிருந்து மதிப்பீடு செய்வார்.
இந்த மதிப்பீட்டு கருவியானது ஆளுமை மற்றும் சேவைநாடி முன்வைக்கும் சிக்கல்களை அணுகுவதற்கு இந்த பரிமாணங்கள் எவ்வாறு ஒன்றாகச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க உளவளத்துணையாளர்க்கு உதவுகிறது.
இந்த மதிப்பீடானது, பிரச்சனைகளின் காரணிகளை முதன்மையாக பாதிக்கும் பரிமாணங்கள் அல்லது பரிமாணங்கள் பற்றி; கவனம் செலுத்துகிறது.
No comments:
Post a Comment